கூகுளில் தமிழில் தேட

கூகுள் இந்தியா முகப்புப் பக்கமான www.google.co.in க்குச் சென்று தமிழ் மொழியைத் தேர்வு செய்தவுடன் அப் பக்கம் தமிழ் இடைமுகப்புக்கு மாறிவிடும். அப் பக்கத்தில் தேடுசொல் உள்ளிடுவதற்கான தேடல்பெட்டியின் வலது ஓரத்தில் தமிழில் தட்டச்சிடுவதற்கான உள்ளீட்டுக் கருவி சிறிய கட்ட வடிவில் உள்ளது. அதனைச் சொடுக்கிய பிறகு, தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்துக்களில் தட்டச்சிடுங்கள். தட்டச்சிடும் போது ஒவ்வொரு எழுத்தும் தமிழ் எழுத்தாக மாறிவிடும். எடுத்துக்காட்டாக, vanakkam என்று ஆங்கில எழுத்துக்களில் தட்டச்சிடும் போது, வணக்கம் என்று தமிழ் எழுத்துக்களாக மாறிவிடும். பிறகு தேடு என்பதைச் சொடுக்கினால் அதற்கான முடிவுகள் தமிழிலேயே கிடைக்கும்.